திருப்பத்தூர்: ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி பகுதியிலிருந்து 2.5 டன் நாட்டு தக்காளிகளை ஏற்றிக்கொண்டு மினிவேன் ஒன்று வந்துள்ளது. இதனை ஜாபர் சாதிக் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்த நிலையில், மினிவேன் ஆம்பூரில் உள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே வந்த போது திடீரென முன்பக்க டயர் வெடித்துள்ளது.
இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினிவேன், சாலையின் நடுவே இருந்த தடுப்பு வேலிகள் மீது மோதி நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனைக் கண்ட அப்பகுதியில் இருந்த மினிவேன் ஓட்டுநரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் நகர காவல்துறையினர், விபத்துக்குள்ளான மினிவேன் மற்றும் சாலையில் கொட்டிக் கிடந்த தக்காளிகளை பொதுமக்கள் உதவியுடன் அகற்றினர். மேலும், இவ்விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது!