வேலூர்: டாடா நகரில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் காட்பாடி ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் சென்னை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ரயில் அரக்கோணத்தில் இருந்து காட்பாடிக்கு வரும்போது மூன்று பைகள் சந்தேகப்படும் வகையில் இருந்துள்ளது. இதைக் கண்டு சந்தேகமடைந்த ரயில்வே போலீசார், அந்த பைகள் யாருடையது என வினவியுள்ளனர். யாரும் அதை உரிமை கோராததால், போலீசார் அந்த மூன்று பைகளையும் காட்பாடி ரயில் நிலையத்தில் இறக்கி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அவற்றில் 5 பண்டல்களில் 2 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள, 27 கிலோ எடையுள்ள கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், கஞ்சாவை கைப்பற்றி ரயிலில் கஞ்சாவை கடத்தி வந்தவர்கள் யார்? எங்கிருந்து கடத்தி வந்தனர்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.