ETV Bharat / snippets

வாரிசு சான்றிதழ் பெற ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளர் கைது!

கைது செய்யப்பட்ட இளநிலை உதவியாளராக அஜித் சண்முகநாதன்
கைது செய்யப்பட்ட இளநிலை உதவியாளராக அஜித் சண்முகநாதன் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 28, 2024, 8:17 PM IST

திருநெல்வேலி: வாரிசு சான்றிதழ் பெறுவதற்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லை ராதாபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக அஜித் சண்முகநாதன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், பணகுடியைச் சார்ந்த சிவபாலன் தனது தாத்தா இறந்து விட்டதால் வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக அஜீத் சண்முகநாதனை அனுகியுள்ளார். அப்போது, வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு ரூ.4ஆயிரம் லஞ்சம் தருமாறு அஜித் சண்முகநாதன் கேட்டுள்ளார்.

ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத சிவபாலன், இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகாா் அளித்துள்ளார். பின்னர், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, பணத்துடன் சென்ற சிவபாலன், அஜித் சண்முகத்தைச் சந்தித்துள்ளார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக அஜித் சண்முகநாதனைப் பிடித்துள்ளனர். இதனையடுத்து, அவரைக் கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், அவரது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.