ETV Bharat / snippets

விருதுநகர் விஜய கரிசல்குளம் அகழாய்வில் தங்க நாணயம் கண்டெடுப்பு!

வெம்பக்கோட்டை பெயர் பலகை,  கண்டெடுக்கப்பட்ட தங்க நாணயம்
வெம்பக்கோட்டை பெயர் பலகை, கண்டெடுக்கப்பட்ட தங்க நாணயம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 29, 2024, 8:12 PM IST

விருதுநகர்: வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வில் தங்க நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், விஜய கரிசல்குளத்தில் 3ஆம் கட்ட அகழாய்வில், இதுவரையில் உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட காய்கள், சுடுமண் பொம்மையின் தலைப்பகுதி, சூதுபவள மணி என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் தோண்டப்பட்ட குழியில் தங்க நாணயம் கண்டெடுக்கப்பட்டது.

இது குறித்து அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுசாமி கூறுகையில், “அகழ்வாய்வில் முன்னோர்கள் வாணிபத்தில் ஈடுபட்டதற்கான பல்வேறு சான்றுகள் கிடைத்து வருகின்றது. இந்நிலையில், சமீபத்தில் தங்க நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த நாணயத்தில் ஒரு பகுதியில் இதழ்கள் வடிவமும், மறு பகுதியில் புள்ளி, கோடுகள் செதுக்கப்பட்டுள்ளது. எந்தப் பொருளாக இருந்தாலும் முன்னோர்கள் அலங்காரம் செய்தே பயன்படுத்தியுள்ளனர். அதேபோல், இந்த தங்க நாணயமும் அலங்காரத்துடன் காணப்படுகின்றது” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.