ETV Bharat / snippets

கூடலூர் அருகே 2 புலிகள் மர்மமான முறையில் உயிரிழப்பு.. வனத்துறை விசாரணை!

உயிரிழந்த 2 புலிகள்
உயிரிழந்த 2 புலிகள் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 20, 2024, 8:08 PM IST

நீலகிரி: கூடலூர் அடுத்த பிதிர்காடு வனச்சரகத்திற்கு உட்பட்ட நிலா கோட்டை பகுதி தேயிலைத் தோட்டத்தில் இரண்டு புலிகள் உயிரிழந்துள்ள சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி, கூடலூர் பகுதி முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் முத்தங்கா சரணாலயம் அடங்கிய பகுதியாகும். இப்பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படும். இந்நிலையில், கூடலூர் அருகே பிதிர்காடு வனச்சரகத்திற்கு உட்பட்ட நிலா கோட்டை பகுதியில் தனியார் தோட்டத்தில் இரண்டு புலிகள் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், இரண்டு புலிகளின் சடலங்களையும் மீட்டு, முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ் தலைமையில் பிரேதப் பரிசோதனை செய்து தகனம் செய்துள்ளனர். மேலும், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்பே புலிகள் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.