கடலூர்: கடலூர் மாவட்டம், அரிசிப் பெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த தோழிகளான நித்யா(26), ஹரிணி(26) இருவரும் சோழிங்கநல்லூரில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் பல்லாவரத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய போது, வேளச்சேரி உள்வட்டச் சாலை அருகே பின்னால் வந்த மினி லாரி மோதியதில் இருவரும் கீழே விழுந்துள்ளனர்.
அப்போது, ஸ்கூட்டரின் பின்னால் அமர்ந்திருந்த நித்யா தலைக்கவசம் அணிந்திருந்தும், லாரியின் சக்கரம் தலையில் ஏறியிறங்கியதில் தலை சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வாகனத்தை ஓட்டி வந்த ஹரிணி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். அதைத் தொடர்ந்து, விபத்து ஏற்படுத்திய ராணிப்பேட்டையைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மோகன்குமாரை(21) போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், நித்யாவின் உடல் பிரேதப் பரிசோதனை முடிந்து சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது, விபத்தில் நித்யாவின் தலை சிதைந்ததால், தலைக்குப் பதில் புகைப்படத்தை வைத்து உடலை அடக்கம் செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.