சென்னை: வடசென்னை பகுதிகளில் பலத்த மழை பெய்து வரும் சூழலில் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மாநகர பேருந்து ஒன்று ( தடம் எண்: 44) சென்னை பிராட்வேயில் இருந்து ஐஓசி நோக்கி சென்று கொண்டிருந்தது.
பேருந்தானது வண்ணாரப்பேட்டை பாண்டியன் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென்று பேருந்தின் வலது பக்கத்தில் உள்ள தகரம் பிளந்து பெயர்ந்துள்ளது. அதனை பார்க்காமல் ஓட்டுநர் சிறிது தூரம் பேருந்தை இயக்கி இருக்கிறார். அப்போது சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த வாகன ஓட்டி ஓருவருக்கு லேசான கீறல் ஏற்பட்டு அவர் கீழே விழுந்துள்ளார்.
உடனே, பேருந்தை நிறுத்திய நடத்துனர், பேருந்தின் வெளியே பிளந்து தொங்திய தகரத்தை சரி செய்ய முடியாமல் திணறினார். அதேசமயம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வேறுவழியின்றி, தொங்கிய தகரத்துடனே பேருந்து ஆபத்தான முறையில் இயக்கி செல்லப்பட்டது. இதனை கண்ட வாகன ஓட்டிகள் ஒருவித அத்தத்துடனே வாகன ஓட்டிகள் அந்தப் பேருந்தை கடந்து சென்றனர்.