சென்னை: பிராட்வே பேருந்து நிலையம் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்படவுள்ள நிலையில், அதற்கான மாதிரி புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் பிராட்வே பேருந்து நிலையத்தை இடித்து, நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையமாக கட்டமைக்க சென்னை மாநகராட்சி நிா்வாகம் முடிவு செய்து, இதற்காக 823 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பிராட்வே பேருந்து நிலையத்தை இடிக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. மேலும், பிராட்வே பேருந்து நிலையம் தற்காலிகமாக தீவுத்திடலுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது. பிராட்வேயில் உள்ள குறளகம் கட்டடம் இடிக்கப்பட்டு, 10 மாடிகள் கொண்ட வணிக வளாகமும் கட்டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நவீன வசதிகள் மற்றும் வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து முனையமாக கட்டப்படவுள்ள பிராட்வே பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.