ETV Bharat / snippets

மழைக்கு இடிந்து விழுந்த பள்ளி சுவர்.. மாணவர்களை வெளியே அமர வைத்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 15 hours ago

மழைக்கு இடிந்து விழுந்த பள்ளி சுவர்
மழைக்கு இடிந்து விழுந்த பள்ளி சுவர் (Credits - ETV Bharat Tamil Nadu)

திண்டுக்கல்: பழனி அருகே பழைய ஆயக்குடி பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்கு பருவ மழை காரணமாக பள்ளியின் மேற்கூரைகள் அடிக்கடி இடிந்து விழுந்ததால், பள்ளிக்கு வெளியில் அமர வைத்து பாடம் சொல்லித் தரும் சம்பவம் பெற்றோர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், இங்குள்ள 8 வகுப்பறைகளில், 3 வகுப்பறைகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளதாகவும், மற்றவை சேதமடைந்துள்ள நிலையில், தொடர் மழை காரணமாக அடிக்கடி இடிந்து விழுவதாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதேபோல், நேற்று கோதைமங்கலம் ஊராட்சியில் உள்ள பள்ளி வகுப்பறைகள் இடிந்து விழுந்ததில், குழந்தைகளை அனுப்ப மாட்டோம் எனப் பெற்றோர்கள் அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.