ETV Bharat / snippets

சென்னை வடபழனியில் பால்கனி சுவர் இடிந்து விழுந்ததில் முதியவர் உயிரிழப்பு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 5, 2024, 12:25 PM IST

Updated : Jul 5, 2024, 5:53 PM IST

இடிந்து விழுந்த பால்கனி சுவர்
இடிந்து விழுந்த பால்கனி சுவர் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை மாநகரின் கணேஷ் அவென்யூ பகுதியில், 25 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாடிவீட்டில் வரலட்சுமி என்பவர் கடந்த மூன்று வருடங்களாக வசித்து வருகிறார். வீட்டின் கீழே கிருஷ்ணமூர்த்தி(63) என்பவர் பூ வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில், நேற்றிரவு பூ வாங்குவதற்காக வரலட்சுமி பால்கனி சுவற்றில் சாய்ந்த போது, எதிர்பாராத விதமாகப் பால்கனி சுவர் இடிந்து விழுந்தது. இதில் வரலட்சுமி முதல் தளத்தில் விழுந்து காலில் முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்தார். இந்நிலையில், பால்கனி சுவர் இடிந்து, வீட்டின் கீழே நின்று கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி மீது விழுந்ததால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடபழனி போலீசார் கிருஷ்ணமூர்த்தியின் உடலை மீட்டு கே.கே நகர் புறநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வடபழனி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : Jul 5, 2024, 5:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.