ETV Bharat / snippets

விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்: ரூ.5 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ரசிகர்கள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 22, 2024, 7:42 PM IST

நடிகர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்
நடிகர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம் (PHOTO CREDITS- ETV Bharat Tamil Nadu)

ராணிப்பேட்டை: நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று ஜூன் 22ஆம் தேதி தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் பொறுப்பாளர் பூக்கடை மோகன் தலைமையில் நிர்வாகிகளும், ரசிகர்களும் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தனர்.

சுமார் 5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மாவட்டம் முழுவதும் வேட்டி, சேலை, பிரியாணி வழங்குதல் மற்றும் ரத்ததானம், கண் சிகிச்சை முகாம், மாணவ-மாணவிகளுக்குச் சிற்றுண்டி, கல்வி ஊக்கத்தொகை, முதியோர்களுக்கு அன்னதானம் ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது. இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் ரத்ததானம் செய்த நிலையில், அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.