ETV Bharat / snippets

கோவை தனியார் மருத்துவமனையில் தாக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்த விவகாரம்; 8 பேர் கைது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 29, 2024, 7:03 PM IST

Road Block
சாலை மறியல் (Credits - ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்: கோவை அவிநாசி சாலை சித்ரா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் ராஜா என்பவரை மருத்துவமனை வளாகத்தில் பைப்புகளை திருடியதாக மருத்துவமனை நிர்வாகத்தினர், செக்யூரிட்டிகள் தாக்கியதில் பலத்த காயமடைந்த ராஜா, அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார்.

இந்நிலையில், அவரது உடலுக்கு கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடந்து முடிந்தது. அதேநேரம், இந்த வழக்கில் மருத்துவமனையின் துணைத் தலைவர் நாராயணன், தகவல் பிரிவு மேலாளர் ரமேஷ், செயலாக்கதுறை அதிகாரி சரவணகுமார், பிஆர்ஓ சசிக்குமார், பிளம்பர் சுரேஷ், சரவணகுமார், செக்யூரிட்டி மணிகண்டன், ஸ்டோர் மேனேஜர் சதீஷ்குமார் என எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அவரது உறவினர்கள் அனாதை பிணம் என்று எஃப்.ஐ.ஆர்-ல் குறிப்பிடப்பட்டுள்ளதாக திடீரன பிரேத பரிசோதனை அறை முன்பு சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், காவல்துறையினரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு உடலை வாங்குவதற்கு சம்பந்தம் தெரிவித்தனர். பின்னர், உடல் வாங்கப்பட்டு இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.