ETV Bharat / snippets

விபத்தில் சிக்கிய பெண்.. முதலுதவி செய்த மருத்துவருக்கு குவியும் பாராட்டு!

தூக்கி வீசப்பட்ட பெண்
தூக்கி வீசப்பட்ட பெண் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 14, 2024, 9:20 PM IST

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பேருந்து நிலையத்தில் காய்கறி கடை வைத்திருப்பவர் பாலமுருகன். இவர் கானா விளக்கு அரசு மருத்துவமனையில் உள்ள தனது உறவினரைச் சந்தித்து விட்டு, குடும்பத்துடன் தனது இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பி உள்ளார்.

அப்போது பரசுராமபுரம் அருகே வந்து கொண்டிருந்த போது, பாலமுருகன் மனைவி மணிமேகலை அணிந்திருந்த துப்பட்டா இருசக்கர வாகனத்தின் சக்கரத்தில் சிக்கியது. இதனையடுத்து மணிமேகலை சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.

இந்நிலையில், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மணிமேகலையை அவ்வழியே வந்த கோயம்புத்தூரைச் சேர்ந்த பிரபல மருத்துவர் செல்வராஜ் தனது காரை நிறுத்தச் சொல்லி, உடனடியாக ஓடி வந்து சாலையில் மயங்கிக் கிடந்த மணிமேகலைக்கு முதலுதவி செய்தார்.

அது மட்டுமல்லாமல், ஆம்புலன்ஸ் வரும் வரை அருகில் இருந்து மணிமேகலையை கவனித்துக் கொண்டார். பின் ஆம்புலன்ஸ் வந்தவுடன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் தன் பணிக்குச் சென்ற மருத்துவரின் இச்செயல் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.