ETV Bharat / snippets

இந்தியன் தாத்தா கெட்-அப்பில் அசத்திய குழந்தை.. வத்தலகுண்டில் ரசிகர்கள் கொண்டாட்டம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 12, 2024, 4:32 PM IST

இந்தியன் தாத்தா வேடம் அணிந்து வந்த குழந்தை
இந்தியன் தாத்தா வேடம் அணிந்து வந்த குழந்தை (Credits - ETV Bharat Tamil Nadu)

திண்டுக்கல்: லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'இந்தியன் 2' (Indian 2) திரைப்படம் இன்று உலகளவில் உள்ள திரையரங்குகளில் வெளியானதை முன்னிட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு திரையரங்கில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வெளியான இந்தியன் இரண்டாம் பாகம் திரைப்படம் இன்று வெளியானது. இதனைத் தொடர்ந்து, கமல் ரசிகர்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மாவட்டச் செயலாளர் மனோதிபன் தலைமையில் திரையரங்கு வளாகத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் படம் வெளியானதை ரசிகர்கள் மற்றும் கட்சியினர் கொண்டாடினர். திரைப்படம் காண வந்த குழந்தை ஒன்று ,இந்தியன் தாத்தா வேடம் அணிந்து வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதேபோல, சென்னையில் நடிகர் கூல் சுரேஷ் சேனாபதி கதாபாத்திரம் போன்று காக்கி உடையில் குதிரையில் திரையரங்கிற்கு வந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.