ETV Bharat / snippets

சவுண்ட் வரல சார்.. டிக்கெட் பணத்தை திருப்பி வழங்கிய தூத்துக்குடி தியேட்டர்.. தங்கலான் வெளியீட்டில் சம்பவம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 15, 2024, 3:51 PM IST

தூத்துக்குடி கிளியோபாட்ரா திரையரங்கம்
தூத்துக்குடி கிளியோபாட்ரா திரையரங்கம் (Credits- ETV Bharat Tamil Nadu)

தூத்துக்குடி: நடிகர் விக்ரம் நடித்து, இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள தங்கலான் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே இன்று (ஆகஸ்ட் 15) வெளியானது. அந்த வகையில், தூத்துக்குடியில் புதிதாக நவீன வசதிகளுடன் திறக்கப்பட்டுள்ள ஒரு திரையரங்கிலும் காலை 9.30 மணிக்கு படம் திரையிடப்பட்டது.

இந்நிலையில், முதல் ஷோவில் திரைப்படத்தின் ஆடியோ முறையாக ரசிகர்களுக்கு கேட்காத காரணத்தால், பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்கள் திரையரங்க நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். ஆனால், நிர்வாகம் இதுகுறித்து எந்த பதிலும் அளிக்காததை தொடர்ந்து, ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் திரையரங்கை விட்டு வெளியே வந்து, திரையரங்க ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவிய நிலையில், திரையரங்க நிர்வாகம் சார்பில் திரைப்படம் காண வந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு டிக்கெட் பணம் திருப்பி வழங்கப்பட்டது. இதனால் திரைப்படத்தைக் காண வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.