ஏற்காட்டில் குழந்தைகளுக்கான தளிர் நடை போட்டிகள்.. களைகட்டும் கோடை விழா! - Yercaud Kodai vizha
🎬 Watch Now: Feature Video
Published : May 26, 2024, 7:31 PM IST
சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 47வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டில் குவிந்த வண்ணம் உள்ளனர். கோடை விழாவின் சிறப்பாக குழந்தைகளுக்கு ‘தளிர் நடை போட்டிகள்’ நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஏற்காடு கோடை விழாவில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க பல்வேறு கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்பட்டன. அரசின் பல்வேறு துறைகள் சார்பில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டி நடத்தப்பட உள்ளன. அதன்படி, ஆறாவது நாளான இன்று, மகளிர் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் இணைந்து ஏற்காடு ஏரி பூங்கா வளாகத்தில் குழந்தைகளுக்கான போட்டிகள் நடத்தினர்.
இதில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். இந்த குழந்தைகளின் போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதில் 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நடனம், திருக்குறள் வாசிப்பு, பாட்டுப் போட்டி ஆகியவை நடத்தப்பட்டது. மேலும், ஒன்றரை வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான கொழுகொழு குழந்தை போட்டியில் குழந்தைகளின் எடை, உயரம், ஆரோக்கியம், செயல்பாடுகள் ஆகியவை கணக்கெடுக்கப்பட்டு, சிறந்த குழந்தைகளை தேர்ந்தெடுத்தனர். இப்போட்டியில் தங்கள் குழந்தைகளை பங்கேற்க வைப்பதற்காக பெற்றோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.