வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காட்டு யானை.. பதைபதைக்கும் வீடியோ காட்சி! - ELEPHANT TRAPPED IN FLOOD - ELEPHANT TRAPPED IN FLOOD
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/28-06-2024/640-480-21816288-thumbnail-16x9-che.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Jun 28, 2024, 1:37 PM IST
நீலகிரி: தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் கூடலூரில் உள்ள நீர் நிலைகளில் நீரின் அளவு அதிகரித்து உள்ளதோடு, ஆறுகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆறுகளில் தண்ணீர் குடிக்க வரும் காட்டு யானைகள், தண்ணீருக்குள் இறங்கி ஆற்றைக் கடந்து மறு பகுதிக்குச் செல்கின்றன. அந்த வகையில், கூடலூர் அருகே உள்ள தர்மகிரி பகுதியில் ஆற்றைக் கடக்க மூன்று யானைகள் தண்ணீரில் நடந்து சென்றன. அப்போது ஒரு யானை எதிர்பாராத விதமாக காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியது மட்டுமல்லாமல், நீரில் அடித்துச் செல்லப்பட்டது.
அப்போது, சிறிது தூரம் பாறைகளுக்கு மத்தியில் அடித்துச் செல்லப்பட்ட காட்டு யானை, எப்படியோ நீந்தி தத்தளித்து கரையோரம் வந்து தண்ணீரில் இருந்து வெளியேறி, ஆற்றின் கரைப் பகுதிக்கு பாதுகாப்பாகச் சென்றது. கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காட்டு யானை, வெள்ளத்திலிருந்து தப்பித்த பதைபதைக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.