மேட்டூரில் ஹிந்தியில் பேசி வாக்கு சேகரித்த தருமபுரி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி! - lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video
Published : Mar 28, 2024, 3:21 PM IST
தருமபுரி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இதில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி, தேசிய ஜனநாயக கூட்டணியில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். தற்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அவர், தருமபுரி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட மேட்டூர் பகுதியில் ஹிந்தியில் பேசி, இஸ்லாமிய மக்களிடம் வாக்கு சேகரித்தார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
அந்த வீடியோவில் சௌமியா அன்புமணி ராமதாஸ் பேசியதாவது, "நான் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறேன். உங்களின் ஆதரவை தேடி வந்திருக்கிறேன். முதல் பெண் வேட்பாளராக நான் போட்டியிடுகிறேன். உங்கள் ஆதரவைத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பிரச்சனைகள், தண்ணீர் பிரச்சினை ஆகியவற்றை நான் அறிவேன். அனைவருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்று விருப்பப்படுகிறேன். இதற்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்" என இஸ்லாமியர்களிடம் இந்தி மொழியில் பேசி ஆதரவு கோரினார்.