டோக்கனுக்கு பணம் தராததால் வாக்குவாதம்.. தேனி திமுக பிரசாரத்தில் நடந்தது என்ன? - DMK candidate Thanga Tamil selvan - DMK CANDIDATE THANGA TAMIL SELVAN
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/28-03-2024/640-480-21092321-thumbnail-16x9-tok.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Mar 28, 2024, 6:50 PM IST
தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றிய பகுதிகளான G.கெங்குவார்பட்டி, தேவதானப்பட்டி, சில்வார்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம் உள்ளிட்ட 12 கிராமங்களில், திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தனது ஆதரவாளர்களுடன் காலை 9 மணி முதல் பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்த நிலையில், திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் பொம்மிநாயக்கன்பட்டியில் பிரச்சாரம் மேற்கொள்ளும்போது, கூட்டம் கூட்ட வேண்டும் என்பதற்காக, திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள், 100 ரூபாய் தருவதாகக் கூறி டோக்கன் கொடுத்து பெண்களை அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் பிரச்சாரம் முடிந்ததும், ஒரு சில பெண்களுக்கு மட்டும் பணம் கொடுத்து விட்டு, சிலருக்கு பணம் தராததாகக் கூறி, கூட்டத்திற்கு வந்த பெண்கள் சிலர் அவர்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது மட்டுமின்றி, திமுக உறுப்பினர்கள் சிலர் கையில் பணத்தை கட்டாக வைத்துக் கொண்டு, பிரச்சாரக் கூட்டத்திற்கு வருகை தந்த பெண்களுக்கு, 100 ரூபாய் கொடுக்கும் வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரசாரக் கூட்டத்திற்கு வந்தால் பணம் தருவதாக அழைத்து வந்து டோக்கன் கொடுத்துவிட்டு, வேலை முடிந்ததும் பணம் வழங்காமல் ஏமாற்றி சென்றதாக அப்பகுதி பெண்கள் வசைபாடினர்.