தேனியில் கடும் பனிப்பொழிவு.. முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்ற வாகனங்கள்..! - HEAVY SNOWFALL IN THENI
🎬 Watch Now: Feature Video
Published : 2 hours ago
தேனி: வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக தேனி மாவட்டத்திற்கு நேற்று (டிச.14) ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டது. இந்த எச்சரிக்கை காரணமாக நேற்று (டிச.14) தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா விடுமுறை அறிவித்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (டிச.13) முதலே தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்த சூழலில், நேற்று (டிச.14) அதிகாலை முதல் தேனி மாவட்டம் முழுவதும் பரவலாக மிதமானது முதல் கனமழை வரையில் பெய்தது. கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில், இன்று (டிச.15) காலை முதல் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்கின்றன. மேலும், அதிகாலை முதலே துவங்கப்படும் பனிப்பொழிவு காரணமாக எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத நிலையில் உள்ளதாகவும், பலர் முகப்பு விளக்கு போடாமல் ஓட்டி வருவதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.