வாணியம்பாடி வாக்காளர்களை வரவேற்க கம்பளம்.. நகராட்சி அசத்தல் ஏற்பாடு! - lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 18, 2024, 3:05 PM IST

திருப்பத்தூர்: வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட காந்தி நகர் அரசு நகராட்சி மாதிரி மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக சிறப்பு அலங்காரங்கள், கம்பள வரவேற்பு என வாணியம்பாடி நகராட்சி சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாளை (ஏப்ரல் 19) முதற்கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இத்தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள 121 மற்றும் 122 ஆகிய வாக்குச்சாவடி மையம், வாணியம்பாடி காந்தி நகர் அரசு நகராட்சி மாதிரி மேல்நிலைப்பள்ளி அமைக்கப்பட்டுள்ளது. 

இதில் வாக்களிக்க வரக்கூடிய வாக்காளர்களுக்கு வாணியம்பாடி நகராட்சி சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில் வாக்காளர்கள் கோடை வெயில் காத்திருப்பதற்காக பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல், வாக்காளர்கள் அமருவதற்கான சிறப்பு நாற்காலிகளும், அலங்காரத் தோரணங்களும் நகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அதிகாரிகள் மற்றும் வாக்காளர்கள் வருவதற்காக கம்பள வரவேற்பும் அமைக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.