ஈரோடு கொடிவேரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.. அருவியில் குளித்து மகிழ்ச்சி! - kodiveri dam - KODIVERI DAM
🎬 Watch Now: Feature Video


Published : May 12, 2024, 8:57 PM IST
ஈரோடு: தமிழகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகப் பொதுமக்கள் மலைப்பிரதேசங்களை நோக்கியும், அருவிகளை நோக்கியும் படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், கொடிவேரி அணைக்குச் சுற்றுலாப் பயணிகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அடுத்து கொடிவேரி அணை உள்ளது. பவானி ஆற்றின் குறுக்கே சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த அணையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து அருவி போல் தண்ணீர் கொட்டுவதால் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பணிகள் வருகை தருகின்றனர்.
அந்த வகையில், தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், இன்று சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் கொடிவேரி அணையில் அருவி போல் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். மேலும், சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்துள்ள நிலையில், ஆழமான பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் காவல்துறையினர் எச்சரித்து வருகின்றனர்.