தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு! - Illicit Liquor In Kallakurichi - ILLICIT LIQUOR IN KALLAKURICHI
🎬 Watch Now: Feature Video
Published : Jun 22, 2024, 10:28 AM IST
|Updated : Jun 22, 2024, 2:08 PM IST
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை மூன்றாம் நாளான இன்று பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்டவைகளில் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று (ஜூன் 22) சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு, பி,கே.சேகர்பாபு உள்ளிட்டோர் பதிலுரை ஆற்றி வருகின்றனர். அதனை நேரலையில் காணலாம். துறைகள் தோறும் நிதி ஒதுக்கத்துக்கான மானிய கோரிக்கை விவாதத்துக்காக, தமிழ்நாடு சட்டப்பேரவை நேற்று ஜூன் 20-ம் தேதி மீண்டும் கூடியது. முதல்நாளான நேற்று, மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்கள், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் (Illicit Liquor In Kallakurichi) தெரிவிக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கம் எழுப்பினர். இதையடுத்து சபாநாயகரின் உத்தரவின் பேரில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவையில் பங்கேற்க எதிர்க்கட்சியினருக்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து சபாநாயகரின் அழைப்பை ஏற்க மறுத்த அதிமுகவினர் அவைக் கூட்டத்தை புறக்கணித்ததோடு, சபாநாயகர் நடுநிலையுடன் செயல்பட வில்லை எனக் குற்றம்சாட்டி இருந்தனர். இதற்கிடையே, இன்றைய கூட்டத்திற்கு அதிமுகவினர் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து பேச அனுமதிக்கவில்லை எனக் குற்றம்சாட்டியதோடு, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருப்பு உடையுடன் வந்துள்ளனர். கூட்டத்தின் ஆரம்பம் முதலே அதிமுகவினர் சபாநாயகருடன் கடும் அமளியில் ஈடுபட்டனர். பின்னர், அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
Last Updated : Jun 22, 2024, 2:08 PM IST