திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ஆனி பிரம்மோற்சவம் கொடியேற்றம்! - Annamalaiyar Temple festival - ANNAMALAIYAR TEMPLE FESTIVAL
🎬 Watch Now: Feature Video
Published : Jul 7, 2024, 4:31 PM IST
திருவண்ணாமலை: உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது. பத்து நாட்கள் நடைபெறும் ஆனி பிரம்மோற்சவ விழாவில், ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் அம்பாளுடன் சந்திரசேகரர் மற்றும் விநாயகர் தனித்தனி வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தினால் அலங்கரிக்கப்பட்டு, திருக்கோயிலின் நான்கு மாட வீதிகளைச் சுற்றி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.
இங்கு உள்ள தங்க கொடிமரத்தில் ஆண்டுக்கு நான்கு முறை கொடியேற்றம் நடைபெறும். இந்நிலையில், இன்று ஆடி மாதத்தை வரவேற்கும் விதமாக ஆனி மாதத்தின் கடைசி 10 நாட்கள் கொண்டாடப்படும் ஆனி பிரம்மோற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் வேத மந்திரங்கள் முழங்க வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் 63 அடி உயரம் கொண்ட தங்க கொடி மரம் கோயில் சன்னதியில் கொடியேற்றப்பட்ட நிலையில், இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.