கேரளா நாடாளுமன்றத் தேர்தல்: தமிழக - கேரளா எல்லைப்பகுதியில் தென்காசி எஸ்பி திடீர் ஆய்வு! - kerala lok sabha election 2024 - KERALA LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video


Published : Apr 21, 2024, 9:26 AM IST
தென்காசி: கேராளாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு தமிழக - கேரளா எல்லைப்பகுதியில் தென்காசி காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் நேற்று (சனிக்கிழமை) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
18வது நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற்றது. தேர்தல் முடிவுற்ற பிறகும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. விதிமுறைகள் அமலில் இருக்கும் வரை இரு மாநில எல்லைப்பகுதியில் வாகன தணிக்கையானது நடைபெறும் எனவும், நாடாளுமன்ற தேர்தல் முழுவதுமாக நடைபெற்று முடியும் வரை சோதனையானது தொடர்ந்து நடைபெறும் எனவும் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு தெரிவித்திருந்தார்.
அந்த வகையில், நேற்று தென்காசி மாவட்டம் தமிழக - கேரளா எல்லைப்பகுதியான புளியரை காவல்துறை வாகன சோதனை சாவடியில், பணப்பட்டுவாடாவை தடுக்கவும், அச்சுறுத்தல் இன்றி மற்ற மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அதில், கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களையும், தமிழகத்தில் இருந்து கேரளாவிற்குள் செல்லும் வாகனங்கலையும் முழுவதுமாக ஆய்வு மேற்கொண்டார்.