LIVE: தமிழக வெற்றிக் கழகம் 'தளபதி விஜய் கல்வி விருது விழா' நேரலை - Vijay Education Award Ceremony

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 28, 2024, 10:22 AM IST

Updated : Jun 28, 2024, 10:32 AM IST

thumbnail

சென்னை: நடந்து முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக, முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய், 'தளபதி விஜய் கல்வி விருது' வழங்கும் விழாவில் ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வருகிறார்.சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் விழாவில், விஜய் கல்வி விருதுகள் அதற்காக தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 1,500 மாணவர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு 2 கட்டங்களாக பாராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் காலை 10 மணிக்கு விழா அரங்கிற்கு வருகைத் தந்தார். இன்று 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அவர்களது பெற்றோர் பங்கேற்றுள்ளனர். இதேபோல, அடுத்த ஜூலை 3ஆம் தேதி விழா நடக்க உள்ளதாக புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகளுக்கு காலை உணவாக பொங்கல், வடை வழங்கப்பட்டது. மேலும், பாதியிலேயே பொங்கல் தீர்ந்துவிட்டதால் மாணவ மாணவிகள் மற்றும் உடன் வந்த பெற்றோர்கள் சிலருக்கு காலை உணவு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதற்கு, 10 மணிக்கு மதிய உணவு தயாராகிவிடும் என தவெக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

Last Updated : Jun 28, 2024, 10:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.