LIVE: தமிழ்நாடு பட்ஜெட் 2024-25: அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் - தமிழ்நாடு சட்டப்பேரவை
🎬 Watch Now: Feature Video
Published : Feb 19, 2024, 10:01 AM IST
|Updated : Feb 19, 2024, 12:10 PM IST
சென்னை: நடப்பாண்டிற்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த 12ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் 2024 - 2025ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார்.
முன்னதாக, முதல் கூட்டத்தொடரில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு தயாரித்துக் கொடுத்த உரையின் முதல் பத்தியை மட்டுமே படித்து விட்டு அமர்ந்த நிலையில், கடந்த பிப்.13 மற்றும் 14ஆம் தேதிகளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடந்தது. அதனைத்தொடர்ந்து கடந்த பிப்.15ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான பதிலுரையை அளித்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் மீண்டும் இன்று காலை 10:00 மணிக்குக் கூடியது. இதில் 2024 - 2025ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட்டில் பள்ளி கல்லூரிகளுக்கு கூடுதல் நிதி உதவிகள், சலுகைகள் மற்றும் சாலை வசதிகளை மேம்படுத்த ஒதுக்கீடு, சுகாதரத்துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கடந்தாண்டு பட்ஜெட்டில் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்குவது உள்ளிட்ட நலத்திட்டங்கள் இடம்பெற்ற நிலையில், இந்தாண்டும் மகளிர் நலனை மேம்படுத்தும் நோக்கில் சில அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளன. அதேபோல, தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக இந்த பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாகும் எனவும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
தமிழ்நாடு அரசு 7 முக்கிய அம்சங்களைக் கொண்ட 'மாபெரும் தமிழ்க்கனவு' என்ற தலைப்பில் இந்த பட்ஜெட்டுக்கான நோக்கங்களை வெளியிட்டுள்ளது. மேலும், பட்ஜெட்கான இலட்சினை நேற்று வெளியிடப்பட்டது. அதில், தடைகளைத் தாண்டி வளர்ச்சியை நோக்கி.. என்ற கருப்பொருள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.