LIVE: தமிழ்நாடு சட்டப்பேரவை மானியக் கோரிக்கை விவாதம் நேரலை - tamil nadu assembly 2024
🎬 Watch Now: Feature Video
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கை குறித்த ஐந்தாம் நாள் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதை நேரலையில் காணலாம்.தமிழ்நாடு சட்டப்பேரவை பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கைக்கான விவாதம் கடந்த 20ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பான விவகாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சியான அதிமுக, இந்த விவகாரம் குறித்து பேச மறுப்பதாக கூறி முந்தைய நாட்களில் சட்டப்பேரவையில் வெளிநடப்பு செய்தது.இதனிடையே, இன்றும் (ஜூன் 25) பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கை குறித்த ஐந்தாம் நாள் கூட்டத்தொடர் காலை 10 மணிக்கு 2024-2025 ஆம் ஆண்டுக்கான நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கைத்தறித்துறை, உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, போக்குவரத்து துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்டவைகளுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.மேலும், இந்த விவாதத்தில் சட்டமன்ற கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்களது கருத்துக்களை தெரிவித்த பின்னர் அமைச்சர்கள் எ.வ.வேலு, சிவ.வீ.மெய்யநாதன், மா.மதிவேந்தன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், எஸ்.எஸ்.சிவசங்கர், என்.கயல்விழி ஆகியோர் பதிலுரை நிகழ்த்த உள்ளனர். அதன் பின்னர், துறை ரீதியிலான பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.
Last Updated : Jun 25, 2024, 1:58 PM IST