ஏஐ தொழில்நுட்பத்தில் பார்வையற்றோருக்கு ஸ்மார்ட் கண்ணாடிகள் - வேலூரில் புதிய முயற்சி - Smart spectacles on AI technology
🎬 Watch Now: Feature Video
Published : Mar 12, 2024, 11:26 AM IST
வேலூர்: பார்வையற்றவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence - AI) தொழில்நுட்பத்தில், ஸ்மார்ட் போன் உதவியுடன் இயங்கக்கூடிய 'ஸ்மார்ட் விஷன்' கண்ணாடிகள் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி வேலூரில் நேற்று (மார்ச் 11) நடைபெற்றது.
இந்நிகழ்வில், பார்வையற்றவர்களின் வாழ்க்கை தரத்தை மாற்றும் நோக்கில் ‘ஜே.எம்.பிரிக்டச்’ (JM FRICTECH) என்ற தனியார் நிறுவனம் மூலம் 46 லட்சம் ரூபாய் மதிப்பில், 150 நபர்களுக்கு, AI ஸ்மார்ட் கண்ணாடிகளை இலவசமாக வழங்கியது.
31 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய இந்த கண்ணாடியில் பார்வையற்றவர்களுக்கு, தங்கள் முன்னால் உள்ளப் பொருட்களைக் கண்டறியவும், காட்சியை விவரிக்கவும், எதிரில் இருப்பவரை அடையாளம் காண்பித்து ஆடியோ மூலமாக தெரியப்படுத்தவும், புத்தகங்களைக் ஸ்கேன் செய்து ஆடியோ வடிவில் சொல்லவும், தனியாக நடந்து செல்வதற்கு வழி நடத்தவும், அவசர சூழ்நிலையில் உதவும் வகையில் அலாரம் அடித்து உறவினர்களுக்கு அலர்ட் அனுப்பும் உள்ளிட்ட வசதிகளுடன் இந்த AI கண்ணாடிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வரவழைக்கப்பட்ட பார்வையற்றவர்களுக்கு இலவசமாக இந்த AI கண்ணாடிகள் வழங்கப்பட்டன. கண்ணாடியை இலவசமாக பெற்றுக்கொண்ட பயனாளிகள் அதனை உபயோகித்து மகிழ்ந்தனர்.