வந்தவாசி அருகே அரசு பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து.. 18 பேர் படுகாயம் - Government Bus accident - GOVERNMENT BUS ACCIDENT
🎬 Watch Now: Feature Video
Published : Apr 15, 2024, 8:00 AM IST
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியிலிருந்து எரமலூர், நல்லூர், ஏம்பலம் வழியாக மாவளவாடி வரை செல்லும் அரசு நகரப் பேருந்து, நேற்று முன்தினம் (சனிக்கிழமை) காலை மாவளவாடியிலிருந்து வந்தவாசி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஓட்டுநர் மகேந்திரகுமார் என்பவர் ஓட்டி வந்தார்.
அப்போது, நடுக்குப்பம் கிராமம் அருகே வந்த கொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அப்பகுதியில் உள்ள வயல் வெளி அருகே இருந்த மின்கம்பத்தில் மோதி தலை குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் மகேந்திரகுமார் உட்பட, 18 பயணிகள் காயமடைந்தனர்.
இதனிடையே, இந்த விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும், அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தெள்ளார் காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாபு, விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.