ஆம்பூர் கோழிப்பண்ணையில் திடீர் தீ விபத்து; 5000 கோழிகள் தீயில் கருகி உயிரிழப்பு! - AMBUR FIRE ACCIDENT - AMBUR FIRE ACCIDENT
🎬 Watch Now: Feature Video
Published : May 8, 2024, 12:28 PM IST
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் பகுதியை சேர்ந்தவர், பெரிய தம்பி. இவரது மகன் துரை முருகன். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் கோழிப்பண்ணை வைத்து 10 ஆயிரம் கோழிகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில், இன்று காலை மின்கசிவின் காரணமாக கோழிப்பண்னையின் ஒரு பகுதியில் திடீர் தீப்பிடித்துள்ளது. அதன்பின்னர், தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆம்பூர் தீயணைப்புதுறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் தீயணைப்பு துறையினர், நீண்ட நேரப்போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டுவந்து அணைத்தனர். இந்த தீ விபத்தில் கோழிப்பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த சுமார் 5 ஆயிரம் கோழிகள் தீயில் எரிந்து கருகி நாசமாகின.
மேலும், இச்சம்பவம் குறித்து உமராபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோழிப்பண்ணையில் மின் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் 5 ஆயிரம் கோழிகள் தீயில் எரிந்து கருகிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.