Live: மதுரையில் சீமான் தேர்தல் பரப்புரை! - Seeman Madurai Campaign - SEEMAN MADURAI CAMPAIGN
🎬 Watch Now: Feature Video
Published : Mar 31, 2024, 8:05 PM IST
|Updated : Mar 31, 2024, 8:51 PM IST
மதுரை: மதுரை மாவட்டம், கோ.புதூரில், இன்று (மார்ச் 31) மதுரை மற்றும் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதன் நேரலைக் காட்சிகள்.. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 40 தொகுதியிலும் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த 28ம் தேதி முதல் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், சிவகங்கை மக்களவைத் தொகுதியில் களம் காணும் நாதக வேட்பாளர் எழிலரசியை ஆதரித்து வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து மாலையில், மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யாதேவி ஆதரித்து வாக்கு சேகரித்தார். முன்னதாக, நேற்றைய தினம் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி நாதக வேட்பாளர் சந்திரபிரபா ஜெயபாலை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். இந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Mar 31, 2024, 8:51 PM IST