நான்தான் காந்தி..! நான்தான் சுபாஸ்..! - சுதந்திர தின மாறுவேடப் போட்டியில் கலக்கிய சிறுவர்கள்! - School Kids Fancy Dress Competition - SCHOOL KIDS FANCY DRESS COMPETITION
🎬 Watch Now: Feature Video
Published : Aug 10, 2024, 8:58 PM IST
தஞ்சாவூர்: இந்திய நாட்டின், 78-வது சுதந்திர தினம், வரும் 15-ஆம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படவுள்ள நிலையில், கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில், எல்.கே.ஜி வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் மகாத்மா காந்தி, பாரதியார், வீரபாண்டிய கட்டபொம்மன், வேலுநாச்சியார், சுபாஷ் சந்திரபோஸ், ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர் போன்ற வேடம் அணிந்து, அவர்களது பொன்மொழிகளை கூறி அசத்தினர்.
3-ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு தேசிய கொடியையும், 4-ஆம் வகுப்பு மாணவ மாணவியர்கள் தேசிய பறவையான மயிலையும், 5-ஆம் வகுப்பு மாணவ மாணவியர்கள் தேசிய விலங்கான புலியினையும், வரைந்து, ஓவியப்போட்டியை களைகட்ட செய்தனர்.
இவ்வாறு சின்ஞ்சிறு பள்ளி மாணவ, மாணவியர்கள் தேசத்தை பற்றியும், தேசத்திற்காக போராடிய சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றியும், தேச தலைவர்கள் பற்றியும் புரிந்துக் கொண்டு அவர்களை போல் நடித்தும், பாடல் பாடியும், வசனங்கள் கூறியும் அங்கு கூடியிருந்த பெற்றோர்கள், ஆசிரியர்கள், மற்றும் ஏராளமான பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தனர்.