LIVE: "ஜெய் ஜெகந்நாத்" பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை நேரலை - Puri Jagannath Temple Rath Yatra - PURI JAGANNATH TEMPLE RATH YATRA
🎬 Watch Now: Feature Video


Published : Jul 8, 2024, 9:43 AM IST
|Updated : Jul 8, 2024, 2:49 PM IST
ஒடிஷா: உலக புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை 2024 வெகு விமரிசையாக நேற்று முதல் தொடங்கி இரண்டாம் நாளான இன்றும் (திங்கட்கிழமை) நடைபெற்று வருகிறது. அதன் நேரலையைக் காணலாம்.முன்னதாக, 1971-க்கு பிறகு இந்த ஆண்டில் நடந்துவரும் ரத யாத்திரை திருவிழாவின் இரண்டு நாளான இன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து பிரம்மாண்டமான ரதத்தை "ஜெய் ஜகந்நாத்" என்ற கோஷங்களுடன் இழுத்து வருகின்றனர். விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த ரத யாத்திரையில் கிருஷ்ணர் மற்றும் அவரது உடன்பிறந்தவர்களான பாலபத்ரா மற்றும் தேவி சுபத்ரா ஆகிய மூவரும் ரதத்திற்குள் இடம்பெற்றுள்ளனர்.ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி, இந்த ரத யாத்திரைக்கு ஜூலை 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் பொது விடுமுறை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரத யாத்திரையினால் பூரி மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. நேற்று நடந்த இவ்விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Jul 8, 2024, 2:49 PM IST