நாடாளுமன்றத் தேர்தல்: பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு நேரலை காட்சி! - PMK Election Manifesto - PMK ELECTION MANIFESTO
🎬 Watch Now: Feature Video
Published : Mar 27, 2024, 11:29 AM IST
|Updated : Mar 27, 2024, 2:01 PM IST
சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிடுகிறார். அதன் நேரலை காட்சிகள்..தேர்தல் அறிக்கை வெளியிடும் இந்த நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அக்கட்சியில் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், அக்கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சி 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை சென்னையில் இன்று வெளியிட்டது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.இந்த தேர்தலில் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்காக தனது வேட்பு மனுவை நேற்று முன்தினம் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தியிடம் தாக்கல் செய்தார்.பாமக தேர்தல் அறிக்கையில் வரி விலக்கு, மருத்துவம், விவசாயிகள் மற்றும் பெண்களுக்கான பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Last Updated : Mar 27, 2024, 2:01 PM IST