LIVE: தென் தமிழக பாஜக வேட்பாளர்களை ஆதரித்து திருநெல்வேலியில் பிரதமர் மோடி பரப்புரை! - PM MODI IN NELLAI - PM MODI IN NELLAI

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 15, 2024, 5:03 PM IST

Updated : Apr 15, 2024, 5:37 PM IST

திருநெல்வேலி: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மோடி திருநெல்வேலியில் இன்று (திங்கட்கிழமை) பரப்புரை மேற்கொள்கிறார். அதன் நேரலை காட்சிகள்..நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 3 தினங்களே உள்ள நிலை தேசிய கட்சித் தலைவர்கள் தமிழகத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்த ஆண்டில் 8வது முறையாகத் தமிழகம் வந்துள்ள மோடி, திருநெல்வேலி அம்பாசமுத்திரம் அருகே உள்ள அகஸ்தியர்பட்டியில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதில், திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், தென்காசி தொகுதி பாஜக கூட்டணிக் கட்சியான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் ஜான் பாண்டியன், கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி தொகுதி பாஜக கூட்டணிக் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் விஜய சீலன் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். முன்னதாக, திருவனந்தபுரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.
Last Updated : Apr 15, 2024, 5:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.