அண்ணாமலையார் கோயிலில் பங்குனி மாத சனி பிரதோஷம் வழிபாடு - Pradosham
🎬 Watch Now: Feature Video
Published : Apr 7, 2024, 9:55 AM IST
திருவண்ணாமலை: உலக புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் பௌர்ணமி மற்றும் அமாவாசைக்கு 2 தினங்களுக்கு முன்பு, கோயிலில் உள்ள மகா நந்திக்கு பிரதோஷம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், பங்குனி மாத பிரதோஷம் நேற்று (சனிக்கிழமை) சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
பிரதோஷத்தை முன்னிட்டு கோயிலில் உள்ள பெரிய நந்திக்கு அரிசி மாவு, மஞ்சள் தூள், பஞ்சாமிர்தம், தயிர், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி மற்றும் பால் உள்ளிட்டவற்றைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் நந்தி பகவானுக்கு அறுகம்புல், வில்வ இலை, சாமந்திப்பூ, உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட மாலைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு, பஞ்சமுக தீபாராதனையும் நடைபெற்றது.
மேலும், பிரதோஷ தினத்தில் நந்திபெருமானை வழிபட்டால் நினைத்த அனைத்து காரியங்கள் அனைத்து நிறைவேறும் என்பது மக்களின் நம்பிக்கை. இதனையடுத்து நேற்று நடைபெற்ற பங்குனி மாத சனி பிரதோஷத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, நந்தி வர்மனை வழிபட்டு அரோகரா கோசம் எழுப்பினர்.