நரியம்பட்டு எருது விடும் விழா; 250க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு! - bull cart race at Tirupathur
🎬 Watch Now: Feature Video
Published : Feb 8, 2024, 2:00 PM IST
|Updated : Feb 10, 2024, 5:14 PM IST
திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே உள்ள நரியம்பட்டு கிராமத்தில், 32ஆம் ஆண்டு எருது விடும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த எருது விடும் விழாவில் வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, ஆந்திர மாநிலம் குப்பம் போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 250க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
மேலும், இந்த விழாவில் கால்நடை மருத்துவர்களின் உரிய பரிசோதனைக்குப் பின்னர், காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிட்டதும் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. குறிப்பிட்ட இலக்கை குறைந்த மணித்துளிகளில் கடந்த காளைக்கு முதற்பரிசாக ரூ.1 லட்சமும், 2ஆம் பரிசாக ரூ.85 ஆயிரமும், 3வது பரிசாக ரூ.75 ஆயிரம் என மொத்தம் 40 பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த எருது விடும் விழாவைக் காண பல்வேறு பகுதிகளிலிருந்தும், பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்திருந்தனர். மேலும், இந்த விழாவில் விழாக் குழுவினர்காளைகளுக்கு போதிய ஏற்பாடுகள் செய்யாததால், போட்டியில் ஓடிய பல காளைகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.