இறந்த நாய் குட்டியை குழி தோண்டி புதைத்த தாயின் பாசப் போராட்டம்.. கண்கலங்க வைக்கும் வீடியோ! - dog emotional video - DOG EMOTIONAL VIDEO
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/27-03-2024/640-480-21085265-thumbnail-16x9-dog.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Mar 27, 2024, 8:47 PM IST
மயிலாடுதுறை: சீர்காழி கடை வீதியில் கடந்த சில ஆண்டுகளாக நாய் ஒன்று சுற்றித் திரிந்து வந்தது. அப்பகுதி வணிகர்கள் அந்த நாய்க்கு உணவளித்து வளர்த்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் சாலையைக் கடக்கும் போது இருசக்கர வாகனம் மோதி அந்த நாய் காயமடைந்தது. இதனையடுத்து, அப்பகுதி வணிகர் ஒருவர், அந்த நாய்க்கு சிகிச்சை அளித்து பராமரித்து வந்தார். இந்நிலையில், அந்த நாய் நான்கு குட்டிகளை ஈன்று பாசத்துடன் அவற்றை பாதுகாத்து வந்தது.
நேற்று மாலை நாயின் காயத்திற்கு சிகிச்சை அளிக்கச் சென்ற போது, நான்கு குட்டிகளில் ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதனை அறிந்த தாய் நாய், இறந்த குட்டியை வாயில் கவ்விக் கொண்டு, சற்று தொலைவில் குழி தோண்டி, அதில் குட்டியை போட்டு மண்ணை போட்டு மூடியது. பின்னர் குட்டி இறந்த துக்கத்தில், அங்கும் இங்கும் கத்தியபடி ஓடித் திரிந்தது. தனது குட்டி இறந்த துக்கம் தாங்க முடியாத தாய் நாயின் செயலைக் கண்ட பொதுமக்கள் கண்கலங்கினர்.