தஞ்சை பெரியகோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவு... எவ்வளவு லட்சம் வருவாய் தெரியுமா? - Thanjavur Big Temple - THANJAVUR BIG TEMPLE
🎬 Watch Now: Feature Video
Published : Jul 17, 2024, 1:39 PM IST
தஞ்சாவூர்: உலகப் பிரசித்தி பெற்ற கோயில் தஞ்சை பெரியகோயிலாகும். இந்த கோயிலில் பெருவுடையார், பெரிய நாயகி அம்மன், வராகி அம்மன், முருகன், கருவூரார், விநாயகர் உள்ளிட்ட சன்னதிகளின் உள்ளன. மேலும், கோயிலுக்கு சாமி தரிசனம் செய்யவரும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக கோயிலில் 11 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த உண்டியல்கள் அனைத்து மாதம் ஒருமுறை திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். சமீபத்தில் ஆனி மாதம் திருக்கல்யாண மகோத்ஸவம் வெகுசிறப்பாக நடைபெற்றது. அந்த வகையில், கோயிலில் உள்ள உண்டியல்கள் நேற்று காலை திறக்கப்பட்டு காணிக்க எண்ணும் பணி நடைபெற்றது. அதில், 48 லட்சத்து 62 ஆயிரத்து 507 ரூபாயும், 92.500 கிராம் வெள்ளியும், 3.900 கிராம் தங்கம் மற்றும் வெளிநாட்டு நோட்டுகளும் காணிக்கையாக இடப்பட்டுள்ளன.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் சூரியநாராயணன், உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில் முழு பாதுகாப்புடன் நடைபெற்றது. மேலும், வங்கி ஊழியர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் உள்ளிட்டோர் இப்பணியில் ஈடுபட்டனர்.