LIVE:மயிலாடுதுறையில் மு.க.ஸ்டாலின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..நேரலை
🎬 Watch Now: Feature Video
Published : Mar 4, 2024, 10:25 AM IST
|Updated : Mar 4, 2024, 11:44 AM IST
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தலில் புதியதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 4) திறந்து வைக்கிறார். மேலும் அவர் பல்வேறு முடிவுற்ற நலத்திட்ட பணிகளையும் திறந்து வைத்து சிறப்புரையாற்றி வருகிறார். அதை நேரலையில் காணலாம்..மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.அது மட்டுமல்லாமல், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.423.36 கோடி மதிப்பீட்டில் 71 கட்டடப் பணிகளை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்.அதேபோல், ரூ.88.62 கோடி மதிப்பீட்டில் 40 பணிகளுக்கான புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்ட உள்ளார். மேலும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 12,653 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் என சுமார் 655.44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டப் பணிகளை வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரையாற்றி வருகிறார். முதலமைச்சரின் வருகையில் அப்பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஏராளாமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Last Updated : Mar 4, 2024, 11:44 AM IST