மத்திய சென்னை, தென் சென்னையில் மு.க.ஸ்டாலின் பரப்புரைப் பொதுக்கூட்டம்! - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video
Published : Apr 17, 2024, 5:37 PM IST
|Updated : Apr 17, 2024, 6:00 PM IST
சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடையவுள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் க.செல்வம் மற்றும் ஸ்ரீபெரும்புத்தூர் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரித்தார். இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 16) பெசன்ட் நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், மத்திய சென்னை மற்றும் தென் சென்னை திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார். அதன் நேரலைக் காட்சிகள்.. முன்னதாக நேற்று திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் மற்றும் வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4ஆம் தேதி நடைபெறுகிறது. அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அமமுக உள்ளிட்ட கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
Last Updated : Apr 17, 2024, 6:00 PM IST