சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுகிறது: அமைச்சர் துரைமுருகன்! - Minister Durai Murugan - MINISTER DURAI MURUGAN

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 30, 2024, 11:42 AM IST

வேலூர்: வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், வேலூர் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், "காங்கிரஸ் கட்சி, வரி மற்றும் அபராதமாக ரூ.1,823 கோடி செலுத்த வேண்டும் என தேர்தல் சமயத்தில் வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியே பதிலளித்துவிட்டது. எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கத்தோடு, இவை அனைத்தும் செய்யப்படுகிறது.

பாஜக ஆளுங்கட்சியினர் என்பதால், அரசு தற்போது அவர்கள் கையில் உள்ளது. அதன் மூலம் அவர்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள். அதற்கு நாம் என்ன செய்ய முடியும். மக்கள் தான் இதற்கு தீர்ப்பளிக்க வேண்டும். பாஜக கூட்டணியில் உள்ள கட்சியினர்கள் கேட்டால், அவர்களுக்கு தேவையான சின்னங்கள் வழங்கப்படுகிறது.

அதே எதிர்க்கட்சியினர் கேட்டால், அவர்கள் ஏற்கனவே பயன்படுத்திய சின்னமாக இருந்தாலும், அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. இதனால், மற்றவர்கள் சொல்வது போல், தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து கொள்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது" எனக் கூறினார். 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.