நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதிய மினி வேன்.. சிசிடிவி காட்சிகள் வெளியானது! - Tirupattur Mini Van accident - TIRUPATTUR MINI VAN ACCIDENT
🎬 Watch Now: Feature Video


Published : Jul 11, 2024, 10:11 PM IST
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் குருபவானிகுண்டா என்னும் பகுதியில் இருந்து அரசுப் பேருந்து ஒன்று திருப்பத்தூர் பேருந்து நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், அந்த பேருந்து ஜோலார்பேட்டைக்கு அடுத்த பேருந்து நிறுத்தமான ஆசிரியர் நகர் பகுதியில் நின்று பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தது.
இதனை கவனிக்காத மாங்காய் லோடுகளை ஏற்றி வந்த மினி வேன் ஓட்டுநர், நின்று கொண்டிருந்த பேருந்து மீது அதிவேகத்துடன் மோதியுள்ளார். இதில் பேருந்தின் பின்பக்கம் சேதமடைந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக எந்த பேருந்து பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படமால் தப்பித்தனர்.
ஆனால், அதிவேகத்தில் மினி வேனை ஓட்டிவந்த ஓட்டுநரின் கை உடைந்தது. இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் ஓட்டுநரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய மினி வேனை காவல் நிலையம் கொண்டு சென்றனர். இந்நிலையில், பேருந்து மீது அதிவேக மினி வேன் மோதிய சம்பவம் ஆசிரியர் நகரில் உள்ள கடை ஒன்றில் பொருத்தப்படிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.