பஞ்சாக்கை ஸ்ரீ அக்னிபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. ஆதினங்கள் பங்கேற்பு! - sri agnipureeswarar temple - SRI AGNIPUREESWARAR TEMPLE

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 12, 2024, 6:48 PM IST

மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் அருகே பஞ்சாக்கை கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான ஸ்ரீ கற்பகாம்பிகை சமேத ஸ்ரீ அக்னிபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தேவார நால்வர்களில் திருநாவுக்கரசரின் வைப்புத்தலமான இக்கோயிலில் தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானங்களின் ஜென்ம நட்சத்திர திருநாளில் வழிபாடு செய்யும் சிறப்புக்கு உரியது. 

கோயிலில் சுவாமி, அம்பிகையை வழிபட்டால் தீமைகள், சத்ரு உபாதைகள் நீங்கி சகல ஐஸ்வர்யங்களும், நீண்ட ஆயுளும் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயில் கடந்த பல ஆண்டுகளாக சிதிலமடைந்து இருந்தது. தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் உத்தரவின் பேரில், கோயில்கள் முழுமையாக திருப்பணி செய்து முடிக்கப்பட்டு இன்று (ஜூலை 12) கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த ஜூலை 7ஆம் தேதி பூர்வாங்க பூஜைகள், 9ஆம் தேதி முதல் கால பூஜைகளுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டன.

கும்பாபிஷேகத்தில் சூரியனார் கோயில் ஆதீனம் 28-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் 18வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், நாச்சியார் கோயில் ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவசுப்ரமணிய தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், தருமபுரம் ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாலை திருக்கல்யாணமும் அதனைத் தொடர்ந்து சுவாமி வீதி உலா காட்சியும் நடைபெறுகிறது. 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.