மகன் படித்த அரசுப் பள்ளிக்கு இலவசமாக கட்டடப் பணி செய்த தந்தை.. மதுரையில் நெகிழ்ச்சி! - Free Mason Work to School - FREE MASON WORK TO SCHOOL
🎬 Watch Now: Feature Video
Published : Aug 20, 2024, 5:07 PM IST
|Updated : Aug 20, 2024, 9:13 PM IST
மதுரை: மதுரை மாவட்டம், எழுமலை அருகே உள்ளது உத்தபுரம் கிராமம். இங்கு கொத்தனார் பணி செய்து வரும் அழகு முருகனின் மகன் பீமன், தற்போது திண்டுக்கல் காந்தி கிராமம் கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பொருளாதாரம் படித்து வருகிறார். இந்நிலையில், அவரது மகன் பள்ளிப் படிப்பை பயின்ற எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பல்வேறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக அழகு முருகனை பள்ளியின் தலைமை ஆசிரியர் தனபால் அழைத்துள்ளார்.
இதையடுத்து, கடந்த மூன்று நாட்களாக பள்ளியில் பல்வேறு கட்டடப் பணிகள் செய்த அழகு முருகன். மூன்று நாள் கூலியை வாங்க மறுத்து, இலவசமாக பராமரிப்பு பணி செய்து கொடுத்துள்ளார். ஏற்கனவே, அவரது மகன் பீமன் இந்தப் பள்ளியில் பயிலும் காலத்தில் பள்ளி வளாகத்தில் ஆர்வத்துடன் பல பூச்செண்டுகள் நட்டதற்காக தனியார் நிறுவனம் அவரது செயலை பாராட்டி, உயர்கல்விக்கு ரூபாய் 25 ஆயிரம் வழங்கி உதவி செய்துள்ள நிலையில், தற்போது அவரது தந்தையும் பள்ளி வளர்ச்சிக்கு உதவிகரமாக இருப்பது நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளதாக முதுகலை பொருளியல் ஆசிரியர் முருகேசன் கூறியுள்ளார்.