பல பரிசுகளை தட்டிச் சென்ற காளை இறப்பு.. இறுதிச்சடங்கு நிகழ்வில் ஊரே திரண்ட நெகிழ்ச்சி! - Vellore bull Funeral - VELLORE BULL FUNERAL
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/03-06-2024/640-480-21621962-thumbnail-16x9-maadu.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Jun 3, 2024, 11:50 AM IST
வேலூர்: வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த தொண்டாம் துளசி பகுதியைச் சேர்ந்தவர் போடி ரெட்டியார் (70). விவசாயியான இவர், பிளேபாய் என்ற பெயரில் 3 வயது காளை மாடு ஒன்றை வளர்த்து வந்தார். அந்த காளை ஒவ்வொரு ஆண்டும் சுற்றுவட்டாரத்தில் நடக்கும் எருது விடும் விழாவில் பங்கேற்று, பல பரிசுகளை தட்டிச் செல்லும் எனவும், அந்த காளை அப்பகுதி மக்களின் செல்லப்பிள்ளை எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக நோய்வாய்ப்பட்டு உயிருக்கு போராடிய காளை மாடு, நேற்று அதிகாலை 2.45 மணியளவில் உயிரிழந்துள்ளது. வீட்டில் ஒருவராக வளர்ந்த காளை மாட்டை, ஊரை விட்டு வெளியே ஒதுக்குப்புறமாக அடக்கம் செய்ய முடிவு செய்தார் போடி ரெட்டியார். அதற்கு மனிதர்களுக்கு செய்வது போல் மேளதாளம், கண்ணீர் அஞ்சலி பேனர் என இறுதிச்சடங்குகளை செய்தார்.
அப்போது, காளை இறந்த செய்தியை அறிந்த சுற்றுப்புற கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள், காளை மாட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, ஊர்மக்களின் மரியாதையோடு காளை மாடு அடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதிச் சடங்கில் உள்ளூர் பகுதி மக்கள் மட்டுமின்றி, வேலூர், வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம், ஆந்திரா, சித்தூர் ஆகிய பகுதிகளிலிருந்தும் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.