ராணிப்பேட்டையில் சாலையோரம் தீப்பற்றி எரிந்த கண்டெய்னர் லாரி.. விபத்தா? சதியா? என போலீஸ் விசாரணை..! - ranipet news
🎬 Watch Now: Feature Video
Published : Feb 1, 2024, 2:15 PM IST
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகரும்பூர் ஜங்ஷன் உள்ளது. இந்த ஜங்ஷன் சர்வீஸ் ரோட்டில் கண்டெய்னர் லாரி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று (ஜன.31) நள்ளிரவு 12 மணி அளவில் மர்மமான முறையில் திடீரென கண்டெய்னர் லாரி தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. கேபின் இல்லாமல் சாலையோரம் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி திடீரென தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், கண்டெய்னர் லாரியில் உள்ள ஒரு டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் அருகே உள்ள குடியிருப்புவாசிகள் அச்சம் அடைந்துள்ளனர். இதைப்பார்த்த அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக காவேரிப்பாக்கம் போலீசார் மற்றும் ராணிப்பேட்டை தீயனைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இத்தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். திட்டமிட்டு கண்டெய்னர் லாரியை மட்டும் குறி வைத்து யாரேனும் தீ வைத்தார்களா? அல்லது வேறு காரணங்களால் தீ பற்றியதா என பல கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.