மதுரையில் களைகட்டிய கன்னி நாய் திருவிழா! - Madurai Kanni Dog Festival

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 21, 2024, 8:29 PM IST

thumbnail
கன்னி நாய் திருவிழா வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

மதுரை: மேலூர் தாலுகாவிலுள்ள ஆமூர் கிராமத்தில் கன்னி நாய் திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஐந்தாவது ஆண்டாக கன்னி நாய் திருவிழா இன்று ஆமூர் கிராமத்தில் நடைபெற்றது. இந்தத் திருவிழாவில் 500க்கும் மேற்பட்ட கன்னி இன நாய்கள் கலந்து கொண்டன. இதில் கலந்து கொண்ட கன்னி இன நாய்களின் உரிமையாளருக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.  

இதுகுறித்து விழா குழுவின் தலைவர் ஆமூர் பிரபு கூறுகையில், "இந்த விழா தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இடையில் கரோனா காலகட்டத்தில் இரண்டு ஆண்டுகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்த திருவிழாவில் கலந்து கொள்ளும் கன்னி இன நாய்களுக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது. மேலும், பார்வையாளர் மற்றும் செல்லப் பிராணியின் உரிமையாளர்களுக்கு விழாக் குழுவினர் சார்பில் காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.  

அதேபோல், முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது எனவும், செல்லப் பிராணிகள் வளர்க்கும் நண்பர்கள் அனைவரின் மத்தியிலும் ஒரு நல்ல உறவு இருக்க வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் இந்த கன்னி நாய் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.