கல்பனா சாவ்லா விருது வென்ற செவிலியர் சபீனா.. கூடலூரில் உறசாக வரவேற்பு! - Nurse Sabina in Gudalur

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 16, 2024, 7:48 PM IST

thumbnail
செவிலியர் சபீனாவை வரவேற்ற சொந்த ஊர் மக்கள் (Credits- ETV Bharat Tamil Nadu)

நீலகிரி: கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி நள்ளிரவில் ஏற்பட்ட கோர நிலச்சரிவின் போது, படுகாயம் அடைந்தவர்களுக்கு, நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த செவிலியர் சபீனா, ஜிப்லைன் மூலம் சென்று முதுலுதவி சிகிச்சை அளித்தார். அவரின் இச்செயலுக்காக பாராட்டுக்கள் குவிந்த நிலையில், தமிழக அரசு சார்பில் வீரதீர செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதை சுதந்திர தின விழாவான நேற்று தமிழக முதல்வர் வழங்கினார்.

இதையடுத்து, சென்னையில் இருந்து சொந்த ஊரான நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு செவிலியர் சபீனா இன்று வந்தார். அப்போது அவருக்கு ஏராளமான பொதுமக்கள் மாலை அணிவித்து, பூக்கள் தூவி வரவேற்பு அளித்தனர். தான் செய்த பணிக்கு இவ்வளவு பாராட்டுக்கள் கிடைக்கும் என நினைத்துப் பார்க்கவில்லை, தமிழக முதல்வரிடம் கல்பனா சாவ்லா விருது பெற்றது தனக்கு பெருமையாக உள்ளது. ஒரு செவிலியராக எனது கடமையைத்தான் செய்தேன். இதற்கு விருது வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி” என சபீனா கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.